LIRNE வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட ‘Learn, Play, Vote” ‘ (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ஊயகுகுநு அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிவபாலராஜா தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், யாழ் மாவட்டத்தில் நேற்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக LIRNE asia நிறுவனத்தின் Senior Research Manager இசுரு சமரத்துங்க அவர்கள் கலந்துகொண்டார்.
மேலும், இந்நிகழ்வின் பிரதம வளவாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் SLBC முன்னாள் செய்திப் பணிப்பாளரும் டிஜிட்டல் ஊடகப் பயிற்றுவிப்பாளருமானஜூனைட் எம். ஹாரிஸ் பங்கேற்றார். அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் அரசறிவியல் துறைத் தலைவருமான கலாநிதி திரு. விக்னேஸ்வரன் அவர்களும், முன்னாள் பொருளியல் துறைத் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சி. உதயகுமார் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு தமது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இப்பயிற்சி அமர்வில் பங்கேற்ற இளைஞர்கள், டிஜிட்டல் தளத்தின் ஊடாக தேர்தல் செயல்முறை குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். விளையாட்டு வழிக் கற்றல் அணுகுமுறையின் மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெற்றதுடன், வாக்காளர் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்த தங்களது புரிதலையும் மேம்படுத்திக்கொண்டனர்.


