• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வசூல் வேட்டையில் எங்கள் தங்கம்.. மாஸ் காட்டும் நடிகை சமந்தா 

சினிமா

தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் நந்தினி ரெட்டி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம்தான் எங்கள் தங்கம்.

இப்படத்தை தயாரித்து கதையின் நாயகியாகவும் சமந்தா நடித்திருந்தார். அதுவும் ஆக்ஷன் ஹீரோயினாக இப்படத்தில் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

13 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் எங்கள் தங்கம் திரைப்படம், ஒவ்வொரு நாளும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 97 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply