குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரிய விவகாரம் - 67 பேரின் கனேடிய குடியுரிமை இடைநிறுத்தம்
கனடா
கனடாவில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தங்கள் குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரி அவர்களில் பலருக்கு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கடிதம் அனுப்பியதால் பெரும் பரபரப்பு உருவானது.
டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமானோர் கனடாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார்கள்.
அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அப்படி கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் பெற்ற பலருக்கு, சமீபத்தில், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அந்த கடிதம் அனுப்பப்பட்டவர்களுடைய ஆவணங்களை மீளாய்வு செய்யவேண்டியுள்ளதாகவும், ஆகவே அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
அந்த விடயம், இந்த விடயம் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றவர்களை ஏமாற்றமடையச் செய்தது.
அப்படி குடியுரிமைச் சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டவர்களில், 67 பேருடைய கனேடிய குடியுரிமை தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, தாங்கள் கனேடிய வம்சாவளியினர் என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் அளித்த ஆவணங்கள் போதுமானவை அல்ல என்பதால், அவர்களுடைய கனேடிய குடியுரிமை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அப்படியானால், அவர்களுடைய ஆவணங்கள் முன்பு ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்னும் கேள்வி எழுகிறது.
விடயம் என்னவென்றால், எந்த ஆவணங்களை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.
மக்கள் தரப்பில், தாங்கள் கனேடிய வம்சாவளியினர் என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் அளித்த ஆவணங்கள் போதுமானவை அல்ல.
அதிகாரிகள் தரப்பில், எந்த ஆவணங்களை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து அவர்களுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படவில்லை.
ஆக மொத்தத்தில், 67 பேருடைய கனேடிய குடியுரிமை தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் மேலதிக மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.






















