TamilsGuide

உலக வரைபடத்தில் ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்-  மிரட்டும் டிரம்ப்

அமெரிக்காவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும், ராணுவ ரீதியாக மோதலை முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் ஈரான் என்கிற ஒரு நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹார்மோஸ் நீரிணையை  திறந்த ஈரான்,  தாங்கள் சொல்லும் பாதை வழியாக மட்டுமே கப்பல்கள் செல்லவேண்டும்.. இல்லையென்றால் தாக்குவோம் என ஈரான் குறியது. ஒரு சரக்குக் கப்பலையும் ஈரான் தாக்கியது.

இதனால் கோபமடந்த அமெரிக்கா ஈரானை தாக்கியது. அதுமட்டுமல்லாது ஒருபக்கம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில்,

‘கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அமெரிக்காவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. ராணுவ ரீதியாக இந்த மோதலை முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் ஈரான் என்கிற ஒரு நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a comment

Comment