TamilsGuide

பலவீனமான போர்நிறுத்தம் - டிரம்ப் மீது அதிகரிக்கும் அழுத்தம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகால அமைதி உடன்படிக்கை ஏற்படாத நிலையில், இரு தரப்பும் ஒன்றையொன்று தொடர்ந்து தாக்கி வந்தாலும், தற்போது மீண்டும் ஒரு பலவீனமான போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இது நிரந்தர அமைதிக்கு வித்திடும் என்று மத்தியஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான நெருக்கடியில் உள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் வரை, அந்நாட்டிற்கு எவ்வித நிதி உதவியும் வழங்கக்கூடாது என்று ட்ரம்ப்பின் ஆதரவுத் தளத்திலேயே அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

பேச்சுவார்த்தைகளை நீட்டிப்பதன் மூலம் ஈரான் எந்த நன்மையையும் பெறக்கூடாது என்பதில் இந்த தரப்பினர் உறுதியாக உள்ளனர். மறுபுறம், இந்த மோதல்கள் காரணமாக தனது செல்வாக்கு சரிந்திருப்பதையும், நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டிருப்பதையும் ட்ரம்ப் நன்கு உணர்ந்துள்ளார்.

எனவே, சிக்கலான இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்தி ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.
 

Leave a comment

Comment