TamilsGuide

ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை

எழுத்தாளர் இ. ஜீன் கரோல் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறு வழக்கில், டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2023-ம் ஆண்டு நியுயோர்க் நீதிமன்றத்தில் நடந்த சிவில் வழக்கில், 1990-களில் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், பின்னர் அதைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கும் டிரம்ப் பொறுப்பு என்று அறங்கூறுநர் சபை தீர்ப்பளித்தது.

இதற்காக அவர் கரோலுக்கு 5 மில்லியன் டொலர்களை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் தாக்கல் செய்த மனுவை இன்று உயர் நீதிமன்றம் எவ்வித விளக்கமும் அளிக்காமல் நிராகரித்தது.

இந்த முடிவின் மூலம், ஏற்கனவே உள்ள 5 மில்லியன் டொலரை இழப்பீடாக ட்ரம்ப் செலுத்தவேண்டும் என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த 5 மில்லியன் டொலர் தீர்ப்பு தவிர, மற்றொரு அவதூறு வழக்கில் டிரம்ப் மீது 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்ப்பையும் டிரம்ப் எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார், அது இன்னும் கீழ் நீதிமன்றம் ஒன்றில் நிலுவையில் உள்ளது.
 

Leave a comment

Comment