கனடிய மத்திய அரசின் புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகை மற்றும் புதிய குடியேறிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இதனால் மாகாணங்களின் பொருளாதாரமும், அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணம் மற்றும் ஒட்டுமொத்த கனடாவின் தற்போதைய சனத்தொகை வீழ்ச்சி நிலவரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைக்கால தரவுகள், நாட்டின் சனத்தொகை வீழ்ச்சியை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன.
நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் மட்டும், கனடாவின் ஒட்டுமொத்த சனத்தொகை 55,025 ஆல் குறைந்துள்ளது. மத்திய அரசின் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, நிரந்தர குடியேற்றம் 20.2 சதவீதம் சரிவடைந்துள்ளது.
சர்வதேச மாணவர்கள், தற்காலிக பணி அனுமதி பெற்றவர்கள் மற்றும் அகதிகள் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்களாகும்.


