மலர்ந்தும் மலராத பாதி மலர் போல......அந்த வரிகளைக் கேட்ட சிவாஜி கணேசன்..
சினிமா
ஏ.பீம்சிங் இயக்கத்தில் உருவான 'பாசமலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அண்ணன்-தங்கை பாசத்தை விளக்கும் அந்தப் படத்தில், ஒரு தாலாட்டுப் பாடல் தேவைப்பட்டது.............
கவியரசு கண்ணதாசன் வழக்கம் போலத் தன் பேனாவிலிருந்து வைர வரிகளைத் தெறிக்கவிட்டார். அதுதான் "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..." என்ற அந்த அமரக் காவியப் பாடல். இந்தப்பாடலின் வரிகளை இசையமைப்பாளர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெட்டமைத்துக் காட்ட, அதைப் படமாக்கத் தயாரானார்கள்...........
அப்போது அந்த வரிகளைக் கேட்ட சிவாஜி கணேசன், அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாராம்..........
பாடலில் வரும் "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே..." என்ற வரிகளைக் கேட்டவுடன், சிவாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது............
ஒரு கட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், அங்கேயே இருந்த கண்ணதாசனை ஓடிப் போய்க் கட்டிப்பிடித்துக் கொண்டார்..........
"எங்கிருந்து ஐயா இது போன்ற வரிகள் உங்களுக்கு வந்து விழுகின்றன ஒரு தாயால் கூட இவ்வளவு உணர்ச்சிகரமாகச் சொல்ல முடியாது! என்று கூறி விம்மி விம்மி அழுதிருக்கிறார் நடிகர் திலகம்.............
அந்தப் பாடலில் வரும் "சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா" என்ற வரிகள், தன் சொந்த வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அவர் நெகிழ்ந்து போனார்..................






















