• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் ரசிகர்களாலும் கவரப்பட்டு புரட்சித் தலைவர் நெஞ்சில் பெரிய இடம் பிடித்த திரு கே.பாக்கியராஜ்

சினிமா

புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் நாயகனான திரு K.பாக்கியராஜ் திரை உலகில் உயர்ந்து வந்த காலகட்டதிலே  அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மீது  மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார் . தனது திறமையால் சிறந்த படைப்புகளாக அந்த ஏழு நாட்கள்,தூரல் நின்று போச்சு படங்கள் மூலம் மக்கள் திலகம் ரசிகர்களாலும் கவரப்பட்டு புரட்சித் தலைவர் நெஞ்சில் 
பெரிய இடம் பிடித்தார் .
பின்னர் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், பாக்யராஜை தனது 'கலையுலக வாரிசு' எனக் குறிப்பிட்டிருந்தார். பாக்யராஜின் திருமணத்திலும் முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டிருந்தார் அந்த திருமண புகைப்படங்கள் இன்றும் பார்வையில் 
சிறப்புப் பெற்றே இருக்கிறது.

1977-ஆம் ஆண்டு  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கடைசி நடிப்பில் 'அண்ணா நீ என் தெய்வம்' என்கிற படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் பாதியிலே கைவிடப்பட்டு முதல்வராகிட
அதை மக்கள் திலகம் அனுமதியோடு  தொடர்ந்து படமாக்க முயற்சித்தார்.படம் தயாரிப்பில் தாமதமாகிடவே பின்னர் முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அந்தப் படத்தின் படமாக்கப்பட்ட காட்சிகளை இணைத்து புதிய திரைக்கதையை உருவாக்கி "அவசர போலீஸ் 100" என அவர்  பாணியையும் இணைத்து இயக்கி நடித்தார் பாக்யராஜ்.
 அதை 1990 தீபாவளிக்கு வெளியிட்டு வெற்றிப்படமாக்கினார். இதனிடையே 
எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் 
என்ற அரசியல் கட்சியை தொடங்கி  தொடர் முடியாமல் கலைத்துவிட்டார்.
 இன்று அகால மறைந்து விட்ட புரட்சித் தலைவர்  எம்ஜிஆர் அவர்களின் கலையுலக வாரிசு திரு கே.பாக்கியராஜ்
அவர்களுக்கு இதய அஞ்சலி
 

 

Leave a Reply