TamilsGuide

உலகை உலுக்கிய வெனிசுலா நிலநடுக்கம் - 40 ஆயிரம் பேர் மாயம்

வெனிசுலா நிலநடுக்கத்தில் 40 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில்  வியாழக்கிழமை (25) ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிட்டர் அளவிற்கு அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 30 முறை தொடர்ந்து அந்த நில அதிர்வு மக்களால் உணரப்பட்டது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  வெனிசுலாவை  நிலைகுலைய வைத்துள்ளது. வெனிசுலாவின் தலைநகரான மற்றும் காராகஸ், லா குவைரா அகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தன. அதில் ஏராளமான மக்களும் சிக்கிக் கொண்டனர். காணும் இடமெல்லாம் கான்கிரீட் குவியலாக காணப்படுகிறது. பலரும் வீடு மற்றும் உடைமைகளை இழந்து சாலைகளில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் மொபைல் சிக்னல் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

மீட்பு குழுவினரும், தன்னார்வலர்களும் இடுபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் தங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் கண்ணீர் மல்க தேடும் காட்சிகள் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது.

இந்த பேரழிவில் இதுவரை 188 பேரின் உடல் மீட்கப்பட்டிருக்கிறதுடன் சுமார் 40 ஆயிரம் பேர் மாயமாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 

Leave a comment

Comment