TamilsGuide

ரஜினிகாந்தின் தர்மன் படப்பிடிப்பு துவங்கியது

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும், ரஜினிகாந்தின் 173வது படமான ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், படத்தின் தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று படப்பிடிப்பு துவங்கியதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

கமல்ஹாசனோடு இணைந்து ஆர். மகேந்திரனும் இப்படத்தை தயாரிக்கிறார். தமிழ் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்கள் இணையும் இப்படத்தை டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.

அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைக்கிறார். படம் குறித்த பிற தகவல்கள், நடிகர்கள் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment