தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணத்திற்கான அழைப்புகளை சுந்தர்.சி- குஷ்பு தம்பதியினர் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து குஷ்பு மகள் அவந்திகா- ஷ்ரவன் திருமணம் கோவாவில் உள்ள ரிசார்ட்டில் இன்று காலை நடந்தது. இந்த திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தமிழ் திரை உலகில் இருந்து ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், திரிஷா, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், நடன இயக்குனர் பிருந்தா மற்றும் நடிகர்கள் நாகார்ஜூன், வெங்கடேஷ் உள்பட திரை உலக பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது.


