TamilsGuide

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இன்றி உரிய திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர், 14.09.2025 அன்று அறிவிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அனைத்துத் பரீட்சைகளுக்கும் மாணவர்கள் படிப்பதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கருத்தில் கொண்டே இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

Leave a comment

Comment