வெனிசுவேலாவின் தலைநகரான காரகாஸ் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் பாதிப்புகள் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளன.
மொன்டால்பன் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 7.1 ரிச்டர் அளவிலும், 13.2 கிலோமீட்டர் (8.2 மைல்கள்) ஆழத்திலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரகாஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காரகாஸில் உள்ள ஒரு வங்கி கட்டிடம் என நம்பப்படும் கட்டிடம் இடிபாடுகளுடன் காணப்படுகிறது. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், 10,000 முதல் 1 லட்சம் வரை உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் தேசிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .


