TamilsGuide

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே. பாலாஜி காம்போ...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வச்சு, வரிசையா தியேட்டர்கள்ல வசூல் வேட்டை நடத்துன ஒரு மாஸ் தயாரிப்பாளர்னா... அது  கே. பாலாஜி  தான்! சுஜாதா சினி ஆர்ட்ஸ், சுரேஷ் ஆர்ட்ஸ்னு பேரை மாத்தினாரே தவிர, ஹிட் குடுக்குற ஃபார்முலாவை அவர் மாத்தவே இல்லை. இன்னைக்கு இவங்க கூட்டணியில உருவான 17 படங்களோட பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் பத்தி இந்த பதிவு.
1.தங்கை (1967) – 
 1967-ஆம் வருசம்  ரிலீசான இந்தப் படம் தான், தயாரிப்பாளர் கே. பாலாஜி  நடிகர் திலகம் சிவாஜி கணேசன வச்சு தயாரிச்ச முதல் பிள்ளையார் சுழி படம்.
ஏன் இந்தப் படம் தமிழ் சினிமாவுல ரொம்ப ஸ்பெஷல்? 
அன்றைய காலகட்டத்துல நடிகர் திலகம் சிவாஜி சார்னாலே உணர்ச்சிப்பூர்வமான குடும்பக் கதைகள், வரலாற்றுப் படங்கள்ல தான் மிரட்டுவாருனு ஒரு பொதுவான பிம்பம் இருந்துச்சு. ஆனா, பாலாஜி சார் தான் முதன்முதலா "உங்களால ஒரு செம்ம ஸ்டைலான ஆக்ஷன்-டிராமாவையும் தாங்க முடியும்"னு சிவாஜி சாரை நம்பி இந்த 'தங்கை' படத்தை எடுத்தாரு.
சிவாஜி சாரோட அந்த புதுவிதமான மாடர்ன் ஸ்டைல், கே. பாலாஜியின் மிடுக்கான போலீஸ் நடிப்பு, அண்ணன்-தங்கை பாசப் போராட்டம்னு படம் சும்மா விறுவிறுப்பா நகர்ந்ததுனால, அன்றைய காலகட்டத்துல 70 நாட்கள் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைச்சது! கே. பாலாஜி - சிவாஜி கணேசன் அப்படிங்கிற ஒரு 'இமாலய கூட்டணி'க்கு மிக பலமான அஸ்திவாரம் போட்ட படம் இந்த 'தங்கை'!
2.என் தம்பி (1968) – 
 'தங்கை' படம் ரிலீஸாகி பாக்ஸ் ஆபீஸ்ல ஒரு பயங்கரமான சம்பவத்தை செஞ்ச அடுத்த வருஷமே, அதாவது 1968-ல, நம்ம தயாரிப்புச் சிங்கம் கே. பாலாஜி சார், நடிகர் திலகத்தை வச்சு தியேட்டர்களைத் துவம்சம் பண்ண இறக்கின மாஸ் காவியம் தான் இந்த 'என் தம்பி'!
இந்த பட ஒவ்வொரு காட்சிகளையும் அணுவணுவாகச் செதுக்கி, தியேட்டருக்கு வர்ற ரசிகனை அப்படியே சீட்டோட நுனியில உட்கார வச்சாங்க!
 கே. பாலாஜி , சிவாஜி  ஒண்ணா  ஸ்கிரீன்ல வந்து நின்னு சவால் விடும்போது தியேட்டர்லே  சும்மா கைதட்டல் 
அள்ளும்.
அய்யய்யோ மெல்லத்தட்டு பாட்டுக்கு நம்ம நடிகர் திலகம் போட்ட மாடர்ன் வெஸ்டர்ன் டான்ஸ் ஸ்டெப்ஸ் இருக்கே... அது அன்னைக்கு தியேட்டருக்கு வந்த இளவட்டங்களை எல்லாம் சீட்ட விட்டு எழுந்து ஆட வச்சது!
பாசம், பந்தம், துள்ளலான ஆட்டம், விறுவிறுப்பான திரைக்கதைனு எல்லா மாஸும் பக்காவா லோடாகி வந்ததால, 
படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைச்சது.

 அன்றைய சினிமா ரசிகர்களின் பேராதரவோடு, இந்தப் படம் தியேட்டர்களில் தடையில்லாமே 103 நாட்கள் ஓடி 'வெற்றி விழா' சாதனை படைத்தது!
3.திருடன் (1969) 
(நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாரோட  கேரியர்ல  ஒரு அசல் "Fan Boy படம்"-னு சொல்லக்கூடிய ஒரு வெறித்தனமான மாஸ் ஆக்ஷன் படம்... அதுதான் 'திருடன்'! 1969-ஆம் ஆண்டு ரிலீசான இந்தப் படம், தியேட்டர்கள்ல சும்மா ஆக்ஷன் திருவிழாவே நடத்துச்சு!
இந்த படத்தோட அசல் வெறித்தனம் என்ன தெரியுமா? 
தயாரிப்பாளர் கே. பாலாஜி சார் நம்ம சிவாஜி சாரோட ஒரு தீவிரமான ரசிகனா மாறி, "என் தலைவனை நான் எப்படிப் பார்க்கணும்னு ஆசைப்படுறேனோ, அப்படித் திரையில காட்டுவேன்"னு சவால் விட்டு எடுத்த படம் இது!
படம் முழுக்க நம்ம நடிகர் திலகத்தோட மாஸ் ஸ்டைல்கள் தான் சும்மா அள்ளும்! அவர் போடுற அந்த மாடர்ன் காஸ்டியூம்ஸ், ஸ்டைல் நடைகள், கெத்துனு ஒவ்வொரு பிரேம்லயும் சிவாஜி சார் சும்மா மிரட்டியிருப்பாரு! அதுமட்டும் இல்லாம, இந்த படத்துல வர்ற அசத்தல் சண்டை காட்சிகள் இருக்கே... அது அன்னைக்கு தியேட்டரையே அதிர வச்சது. 
சிவாஜி சாரோட அசாத்தியமான மாஸ் ஸ்டைலுக்கும், அந்த அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் கொடுத்த மரண மாஸ் ஆதரவால, இந்தப் படம் தியேட்டர்களில் சும்மா அனல் பறக்க 98 நாட்கள் ஓடி மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது!
4. எங்கிருந்தோ வந்தாள் (1970) சிவாஜி ஜெயலலிதா ஜோடி சேர்ந்த மாபெரும் தீபாவளி ஹிட் படம்! இந்திப் படம் 'கி லோனா'-வோட ரீமேக். இதுல சிவாஜி சார் நடிச்ச அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கேரக்டர்ல  சிவாஜி சார் உள்ள வந்து நடிப்புல மிரட்டியிருப்பாரு. படம் 110 நாட்கள் ஓடுச்சு .
5. ராஜா (1972) – 
இந்தி சினிமாவுல தேவ் ஆனந்த் நடிச்சு சூப்பர் ஹிட்டான 'ஜானி மேரா நாம்' படத்தோட தமிழ் ரீமேக் தான் இந்த 'ராஜா'. இந்த ஸ்பை-ஆக்ஷன் படத்துல சிவாஜி சாரும், ஜெயலலிதாவும் ஜோடியா நடிச்சிருப்பாங்க. விறுவிறுப்பான கடத்தல் மற்றும் துப்பறியும் கதைக் களம் கொண்ட இந்த படம், ரிலீசான புதுசுல தியேட்டர்கள்ல திருவிழா கூட்டத்தைக் கூட்டி 108 நாட்கள் 'ராஜா'  ராஜ நடை போட்டுச்சு!
6. நீதி (1972) – 99 நாட்கள்
இந்தி 'துஷ்மன்' படத்தின் ரீமேக். ஒரு லாரி டிரைவரா வர்ற சிவாஜி, எதிர்பாராமல் ஒருத்தரைக் கொன்னுட்டு, அந்தப் பாவத்துக்குப் பரிகாரமா அந்த குடும்பத்தையே தாங்கிப் பிடிப்பாரு. இந்த படத்துல சிவாஜி சாருடன் ஜெயலலிதா மற்றும் சௌகார் ஜானகி  நடிச்சிருப்பாங்க. எம்.எஸ்.வி இசையில "நாளை முதல் குடிக்க மாட்டேன்..." பாட்டு செம்ம ஹிட்! படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைச்சது.
7.என் மகன் (1974) – 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புப் பசிக்கு டபுள் தமாக்காவா தீனி போட்ட  ஆக்ஷன் காவியம்... அதுதான் 'என் மகன்'! 
இதுல  சிவாஜி  சும்மா ஒத்தையில வரலை... அப்பா, மகன் அப்படின்னு இரட்டை வேஷம். ரெண்டு கெட்டப்புக்கும் நடுவுல அவர் காட்டுற அந்த வித்தியாசமும், மாஸ் ஸ்டைலும் அட்டகாசம்தான்.
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா பாட்டு அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியா அமைஞ்ச பாட்டு.
இந்தப் படம் தியேட்டர்களில் 101 நாட்கள் ஓடி 'செஞ்சுரி' அடிச்சு சாதனை படைச்சது!
8. உனக்காக நான் (1976) – 
இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் ராஜேஷ் கன்னா நடிச்ச 'நமக் ஹராம்' படத்தோட ரீமேக். 
தமிழ்ல அந்தப் படத்த பாலாஜி சார் தயாரிச்சப்போ, ஜெமினி கணேசன் சிவாஜியுடன் இணைஞ்சு  முக்கிய வேடத்தில் நடிச்சிருந்தார். நட்புக்கும் தியாகத்துக்கும் இலக்கணம் எழுதின இந்த படம் தியேட்டர்கள்ல 67 நாட்கள் ஓடுச்சு.
9. தீபம் (1977) – 
பாலாஜி சார் தயாரிச்ச பிரம்மாண்ட வெற்றிப் படம். 
சிவாஜி சாரோட அந்த நிழல் உலக தாதா டைப் கேரக்டரும் இளையராஜாவின் இசையில வந்த "அந்தப்புரத்தில் ஒரு மகராணி..." ராஜா யுவராஜா பாட்டும் சேர்ந்து தியேட்டரை அதிர வச்சது. படம் 148 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்துச்சு!
10.தியாகம் (1978) –
 நடிகர் திலகத்தோட நடிப்புப் பசிக்கு செம்ம தீனி போட்ட ஒரு மாபெரும் காவியம்... அதுதான் 'தியாகம்'! 1978-ஆம் ஆண்டு ரிலீசான இந்தப் படம், வசூல்ல சாதனை படைச்சது.
பல பேர் இது ஏதோ ஒரு இந்திப் படத்தோட ரீமேக்னு நினைச்சுட்டிருக்காங்க. ஆனா அதுதான் இல்லை! பெங்காலி சினிமாவுல 'மகா நடிகர்'னு போற்றப்படுற உத்தம் குமார் நடிச்சு, அங்க இமாலய வெற்றி பெற்ற 'அமானுஷ்'  அப்படிங்கிற பெங்காலி திரைப்படத்தோட  தமிழ் ரீமேக் தான் இந்த 'தியாகம்'.
இந்தப் படம் தியேட்டர்கள்ல சும்மா அனல் பறந்து, 175 நாட்கள் ஓடி சாதனை படைச்சது! கே. பாலாஜி - சிவாஜி கூட்டணியோட ஆகச்சிறந்த மாஸ்டர்பீஸ் படங்கள்ல இந்த 'தியாகம்'.
11..நல்லதொரு குடும்பம் -1979
1979-ஆம் ஆண்டு ரிலீசான இந்தப் படத்தை கே. விஜயன் சார் இயக்கியிருந்தாரு.
இது தெலுங்குல  நாகேஸ்வர ராவ் மற்றும் வாணிஸ்ரீ நடிச்சு சூப்பர் ஹிட்டான 'ஆலு மகளு' படத்தோட ரீமேக். தமிழ்ல எடுத்தப்போ, தெலுங்குல நடிச்ச அதே வாணிஸ்ரீயையே நடிகர் திலகத்துக்கு ஜோடியா நடிக்க வச்சாங்க.
ஈகோவினால் பிரியும் தம்பதிகளுக்கு ஒரு நல்ல பாடமா அமைஞ்ச இந்தத் திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் படமா மாறி தியேட்டர்கள்ல 79 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவிச்சது!
12. தீர்ப்பு (1982) –
அடுத்து நாம பார்க்கப் போற படம்... 80-களிலும் நாங்க தான் பாக்ஸ் ஆபீஸ் 'கிங்'னு நிரூபிச்ச ஒரு ஆக்ஷன் குடும்பக் காவியம், அதுதான் 'தீர்ப்பு'! 1982-ஆம் ஆண்டு  ரிலீசான இந்தப் படத்தை ஆர். கிருஷ்ணமூர்த்தி  இயக்கியிருந்தாரு,  இதுல நம்ம நடிகர் திலகம் ஒரு கம்பீரமான, நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டர்ல வந்து தியேட்டரையே அதிர வச்சிருப்பாரு! 
177 நாட்கள் ஓடி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிச்சது இந்த தீர்ப்பு!
13.பந்தம் (1985) – 
அடுத்து நாம பார்க்கப் போற படம்... தாத்தா-மகள்-பேத்தி பாசத்துக்கு இலக்கணம் எழுதின ஒரு உன்னதமான குடும்பக் காவியம், அதுதான் 'பந்தம்'! 
 'பந்தத்தை' உணர்வுப்பூர்வமா சொன்னதுனால, ரசிகர்களின் பேராதரவோடு , 105 நாட்கள் ஓடுச்சு இந்த பந்தம்!
14. நீதிபதி (1983) – 
 நீதிமன்றக் கதைகள் பாலாஜி சாருக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. 'தீர்ப்பு' படத்தோட மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து,  சிவாஜி சாரை ஜட்ஜ் கேரக்டர்ல மிரட்ட வச்ச படம். இந்த படத்துல பிரபு சாரும் ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருப்பாரு! அப்பா-மகன் காம்போவுல இந்த படமும் சளைக்காம 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடுச்சு!
15. விடுதலை (1986) –சுஜாதாஸ் தயாரிப்புல வந்த ஒரு "மெகா மல்டி-ஸ்டாரர்" ஆக்ஷன் படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,  ரஜினிகாந்த், கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன்! இந்தி குர்பானி ரீமேக் இது.
 படம் 86 நாட்கள் ஓடின திரைப்படம் இது.
16. மருமகள் (1986) – 80-களோட நடுத்தரக் குடும்பத்து மருமகள்களோட கதையை, சென்டிமென்ட் கலந்து சொன்ன படம். 
சுரேஷ்  ரேவதி ஜோடியா நடிக்க, அவங்களுக்குப் பின்னாடி ஒரு தூண் மாதிரி சிவாஜி சார் பெரியவரா நின்னு தாங்கிப் பிடிச்சிருப்பாரு. படம் 117 நாட்கள் ஓடுச்சு.
17. குடும்பம் ஒரு கோவில் (1987) –
கூட்டுக் குடும்பம் தான் இதோட கதைக்களம்.படம் 67 நாட்கள்  ஓடிச்சு.
கே. பாலாஜி  தயாரிச்ச படங்கள் ரீமேக்கா இருந்தாலும், அதைத் தமிழ் மண்ணுக்கேத்த மாதிரி, அதுவும் சிவாஜி சாரோட நடிப்புக்கு ஏத்த மாதிரி செதுக்குறதுல பாலாஜி சார் ஒரு 'பிஸ்தா'!
அவங்க படங்கள்ல வெறும் சண்டையோ, ஆபாசமோ இருக்காது; குடும்ப உறவுகள், சட்டம், ஒழுங்கு, தியாகம்னு நல்ல விஷயங்கள் இருக்கும். அதனால தான் அன்னைக்கு தியேட்டர்கள்ல 100 நாள், 175 நாள்னு திருவிழா மாதிரி ஜனங்க கொண்டாடுனாங்க. தமிழ் சினிமா சரித்திரத்துல இந்த பாலாஜி-சிவாஜி கூட்டணி என்றும் ஆகச் சிறந்த மாஸ் கூட்டணி! 

 

செந்தில்வேல் சிவராஜ்

Leave a comment

Comment