எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் ராஜேஷ் கன்னா நடித்த ஹாத்தி மேரே சாத்தி மேஜர் சுந்தர்ராஜன் நடித்த தெய்வச்செயல் மூன்று படங்களும் ஒரே கதை தான்......
இதில் நல்லநேரம் ஹாத்தி மேரே சாத்தி இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி
பெற்றன, அதில் முதல் படமான தெய்வச்செயல் தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் தயாரித்து வெளியிட்ட நாள இன்று. 🤵❤️
1967 ஜுன் 23ம் தேதி தேவர் தெய்வச் செயல் என்ற படத்தை
எம்.ஜி.பாலு இயக்கத்தில் ஆர்.சுந்தர்ராஜன், முத்துராமன் நடித்த இந்தப் படத்தின் கதையை எழுதியதுடன், இயக்க மேற்பார்வையையும் தேவர் கவனித்துக் கொண்டார்.
இசைதிவாகர் முத்துராமன் ராணி ஆதித்தன் மனோகர் பாரதி நடித்திருந்தனர்.
சந்திரகாந்தா ஒளிப்பதிவு என் எஸ் வர்மா படத்தொகுப்பு எம் ஜி பாலு.
ஏறக்குறைய தேவர் எழுதி, இயக்கி, தயாரித்த படம். தெய்வச் செயல் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் தனது கதையின் மீதிருந்த அதீத நம்பிக்கையால் அதையே இந்தியில் அப்போது பிரபலமான ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க முடிவு செய்திருந்தார் தேவர். அதற்காக முழு தொகையும் அட்வான்சாக ராஜேஷ் கன்னாவிடம் தந்து அவரை மகிழவைத்தார்.
ஆனால் அந்த கதையில் ராஜேஷ் கன்னாவுக்கு மனமில்லை அதில் சிறிது மாற்றம் செய்ய விரும்பினார் . அதனால் அவர் திரைக்கதையாசிரியர் சலீம் கானிடம் பிரச்சனையை எடுத்துச் சொல்கிறார். இந்த சலீம் கான் வேறு யாருமில்லை, நடிகர் சல்மான் கானின் தந்தை.
'தேவர் எனக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார் ஆனால் ஆனால், அவர் சொல்கிற கதையை அப்படியே எடுக்க முடியாது, நீங்கள்தான் மாற்றித் தர வேண்டும்' என ராஜேஷ் கன்னா அவரிடம் கோரிக்கை வைக்கிறார். சலீம் கான் ஜவேத் அக்தருடன் இணைந்து தெய்வச் செயல் படத்தின் திரைக்கதையை மாற்றினார். தந்தை, மகன் கதாபாத்திரங்களை இணைத்து, ஒரே கதாபாத்திரமாக்கினார்கள். இப்போது நாயக கதாபாத்திரம் புதிய மெருகுடன் முக்கியத்துவம் பெற்றது.
எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் தேவரின் முதல் இந்திப் படம் ஹாத்தி மேரே சாத்தி வெளியானது. இந்தப் படத்தில்தான் சலீம் - ஜாவேத் வெற்றிக் கூட்டணிக்கு முதல் முதலில் திரையில் அங்கீகாரம் கிடைத்தது. பிறகு ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி இந்திய வணிக சினிமாவின் போக்கையே இவர்கள் மாற்றினர்
1971ல் ஹாத்தி மேரா சாத்தி வெற்றியை தொடர்ந்து தமிழில் வெற்றி நாயகரான புரட்சி திலகம் எம்ஜிஆரை வைத்து நல்லநேரம் திரைப்படத்தை அடுத்ததாக தயாரித்தார் தேவர். அதுவும் மாபெரும் வெற்றியை ஈட்டியதுடன் பாடல்கள் ஹிட்டாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இப்படி ஒரே கதையில் மூன்று திரைப்படங்கள் எடுத்து அவற்றில் இரண்டை வெற்றிபெற செய்து பணமழையில் திரையுலகை குளிப்பாட்டிய தேவரை இன்றும் இந்திய திரைத்துறை வியந்து நோக்குகிறது.
இராம ஸ்ரீநிவாஸன்


