முதல் மரியாதை படம் வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போது பாரதிராஜாவுக்கு ரஷ்யன் கல்ச்சுரல் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது.
அவர்கள் பாரதிராஜாவிடம் எங்களுக்கு முதல் மரியாதை பட பிரிண்ட் வேண்டும்
அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க பாரதிராஜா அவர்கள் அன்றைய காலகட்டத்தில் ஒரு பிரிண்ட் போடுவதற்கு அதிகப்பட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் பாரதிராஜா அவர்கள் சிரித்துக் கொண்டே ஒரு பிரிண்ட் ஒரு லட்ச ரூபாய் என்று சொல்ல அவர்கள் அப்படியா என்று கேட்டுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்கள்....
அடுத்த நாள் ரஷ்யன் கல்ச்சுரல் அலுவலகத்தில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செக் வந்தது....
தங்களுக்கு முதல் மரியாதை படத்தில் 100 பிரிண்டுகள் தேவை என்றும் தாங்கள் கேட்டபடி ரூபாய் ஒரு கோடிக்கு செக் அனுப்பியுள்ளோம்..உடனடியாக முதல் மரியாதை படத்தில் 100 படப்பிரதிகளை தயார் செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்..........
அன்றைய காலகட்டத்தில் 100 படப் பிரதி மொத்தமாக போடப்பட்டால் ஒரு பிரதி 15,000 ரூபாய் மட்டுமே வரும்.......
முதல் மரியாதை படம் பாரதி ராஜாவுக்கு கோடிகளை அள்ளி வழங்கியது இந்த படத்திற்காக அவர் தனது சொத்துக்களை அடமானம் வைத்திருந்தார் .அத்தனை சொத்துக்களும் மீட்கப்பட்டு அவர் ஒரு நல்ல நிலைமைக்கு வருவதற்கு முதல் மரியாதை படம் உதவியது.....
இந்தப் படத்தின் கதையை படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கேட்ட இசைஞானி இளையராஜா அவர்கள் இந்தப் படம் ஓடாது எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த படத்தை தயாரிக்கப் போகிறாய் தேவையற்ற வேலையெல்லாம் செய்யாதே என்று எவ்வளவோ சொல்லியும் பாரதிராஜா தனது முடிவில் உறுதியாக இருந்து அந்தப் படத்தை ஒரு காவியப் படமாக உருவாக்கினார்........
தான் எவ்வளவோ சொல்லியும் தனது நண்பன் தனது பேச்சைக் கேட்காததால்
இந்தப் படம் தோல்விதான் அடையப் போகிறது... நீ மறுபடி என்னிடம் தான் வந்து பணம் கேட்கப் போகிறாய் அதனால் இந்த படத்திற்கு இசையமைத்த எனக்கு பணம் வேண்டாம் என்று இளையராஜா சொல்லிவிட்டார்.......
படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பிறகு இளையராஜா எப்பா இந்த படத்திற்கு எனக்கு பெற வேண்டிய சம்பளத்தை கொடுக்கலாமே என்று எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தும் பாரத ராஜா கொடுக்க மறுத்து விட்டாய் நீ என்றைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாயோ அதனால் நான் உனக்கு அந்தப் படத்தை தர மாட்டேன் என்று சொல்லி தனது முடிவில் கடைசி வரை உறுதியாக இருந்து விட்டார்..........
இயக்குனர் இமயத்தின் மலரும் நினைவுகள்
G Laksmanan


