TamilsGuide

தென்னிந்திய தமிழ் திரையிசை வரலாற்றில் முத்திரை பதித்த  இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் 

தென்னிந்திய தமிழ் திரையிசை வரலாற்றில் முத்திரை பதித்த  இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் #MS_விஸ்வநாதன் அவர்களின் பிறந்ததினம்.
பிறப்பு  24 ஜூன் 1928 /     இறப்பு  14 ஜூலை 2015
மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் (M. S. Viswanathan), அல்லது பொதுவாக எம்எஸ்வி,) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி) விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த எம்.ஜி. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்
🌹🎼இசைப் பயணம்🎼🌹
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விஸ்வநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விஸ்வநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.🌹

🎵 "இசைக்கு உயிர் கொடுத்த இசை மேதை... மெட்டுகளால் மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்!" 🎵
🌺 அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இசை மேதைக்கு நமது மரியாதைமிகு வணக்கங்கள்.

 

Senthil Nathan

Leave a comment

Comment