TamilsGuide

ஆசனப்பட்டிகள் அணியத் தவறிய 400 சாரதிகள், பயணிகள் மீது சட்ட நடவடிக்கை

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாய ஆசனப் பட்டிகள் (seatbelt) அணியும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய சுமார் 400 வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதிய விதிமுறை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க, அதிவேக நெடுஞ்சாலைகளின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூன் 20 அன்று நடைமுறைக்கு வந்த விதிமுறைகளின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைவரும் ஆசனப்பட்டிகள் அணிய வேண்டும்.

அதிவேகச் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும்போது பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
 

Leave a comment

Comment