TamilsGuide

36 கிலோ ஹஷிஷுடன் கனேடிய யுவதி கட்டுநாயக்கவில் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்பு 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648 மூலம் இலங்கைக்கு வந்தடைந்தார்.

சோதனையின்போது, ​​பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) ஹஷிஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment