கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு
இலங்கை
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை (22) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த குழந்தை அருகே இருந்த, பாதுகாப்பற்ற மற்றும் நீர் நிறைந்த கிணற்றில் விழுந்துள்ளார்.
பின்னர், அவர் மீட்கப்பட்டு அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்; ஆனால், அங்கு அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா (வயது-02) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















