அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நண்பர்களைப் பகைத்துக் கொண்டு எதிரிகளுக்குப் பணிந்து போகிறார் என இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இத்தாலி டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி என்னுடன் போட்டா எடுக்கக்கெஞ்சினார். அவர் மீது பரிதாபப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன் என்றார்.
இதற்கு பதில் அளித்த மெலோனி, நட்பு நாடுகளின் தலைவர்களைப் பற்றி அவதூறு கருத்துகளை ட்ரம்ப் கூறுவது இது முதல் முறையல்ல. அவர் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
நானும் இத்தாலியும் ஒருபோதும் கெஞ்சுவதில்லை என பதிலடி கொடுத்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், டிரம்ப் பொய் பேசுகிறார், தனது நண்பர்களைப் பகைத்துக் கொண்டு எதிரிகளுக்குப் பணிந்து போகிறார்.
அமெரிக்காவில் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதில் டிரம்ப் தனக்கு கிடைக்கும் வாக்குகளைப் பார்க்க வேண்டும். அவரது ஆதரவு புதிய உச்சகட்ட சரிவைச் சந்தித்துள்ளது என கூறி அதிபர் ட்ரம்ப்பை வம்புக்கு இழுத்துள்ளார்.
இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன், ஒரு பெரிய சண்டையை எதிர்கொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி தயாராவதை காட்டுகிறது.


