பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.
தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பிரித்தானியப் பிரதமர் தனது பிரதமர் பதவியையும், ஆளும் தொழிற்கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.
தனது இந்த திடீர் முடிவு குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கும் (King Charles III) அவர் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொழிற்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் போட்டிக்கான கால அட்டவணையைத் தயாரிக்குமாறு கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவிடம் தான் கேட்டுக்கொண்டுள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அதன்படி , புதிய தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு முன்னதாக, ஜூலை 16 ஆம் திகதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


