TamilsGuide

அமைதிப் பேச்சுவார்த்தை - அமெரிக்க துணை ஜனாதிபதி சுவிட்சர்லாந்து பயணம்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை மூடி, கப்பல்களுக்கு வரி விதிக்க முடிவு செய்தது.

இதனால் ஏற்பட்ட போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர இப்பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மேலும், வான்ஸ் இன்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி, எண்ணெய் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்நிலையில்,கடந்த வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஈரான் இரத்து செய்திருந்தது.

தற்போது இரு நாடுகளின் குழுக்களும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகியுள்ளன. அத்துடன், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாட்டு அதிகாரிகளும் சுவிட்சர்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a comment

Comment