TamilsGuide

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

யாஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரோனப்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், அதன் வெளியீட்டுத் தேதியை இறுதியாக உறுதி செய்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகிறது.

முன்னதாக, இப்படத்தின் படப்பிடிப்பு 2024 அக்டோபரில் தொடங்கியது. முதலில் 2025, ஏப்ரல் 10 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் தள்ளிப்போனது. பின்னர், ஈத் மற்றும் உகாதி பண்டிகைகளை ஒட்டி, கடந்த மார்ச் 19ம் தேதியை தனது அடுத்த வெளியீட்டுத் தேதியாக இப்படம் உறுதி செய்தது.

ஆனால், அமெரிக்க-ஈரான் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்த வளைகுடா நெருக்கடி காரணமாக, 'டாக்ஸிக்' திரைப்படம் மார்ச் 19-ஆம் தேதியிலிருந்து ஜூன் 4-ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அன்றும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், டாக்சிக் படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டடு வெளிவரவுள்ளது .

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

முன்னதாக, உலக அளவில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை போற்றும் வகையில் யாஷ் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment