தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் மிக அருகிலிருந்து பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சிங்கக் குட்டிகளைக் கண்டு களிப்பதற்கும், அவற்றை மிக அருகிலிருந்து பார்க்கும் தனித்துவமான அனுபவத்தைப் பெறுவதற்கும் கடந்த வாரங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஏற்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளன.
எனவே, இந்த சிங்கக் குட்டிகளை மிக அருகிலிருந்து பார்க்க விரும்பும் விலங்குப் பிரியர்கள் மற்றும் குடும்பங்கள், இந்த வார இறுதியுடன் நிறைவடையும் இந்த விசேட வாய்ப்பைப் பயன்படுத்தி, அதற்கு முன்னர் மிருகக்காட்சிசாலைக்கு விஜயம் செய்யுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


