TamilsGuide

சர்வதேச யோகா தினம் இன்று

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று(21) காலை யோகா தின நிகழ்வுகளும் யோகாசன கலைகளும் இடம்பெற்றன.

இந்தியத் துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றது.

யாழ் மாவட்டத்திலுள்ள சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் யோகாசன மாணவர்கள் அடங்கலாக 2500 க்கு மேற்பட்ட யோகாசன மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் இம்முறையும் 12 வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம் பெறுவதாக இந்திய துணை தூதுவர் சாய் முரளி அவர்கள் குறிப்பிட்டார் ” ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்” என்ற தொனிப் பொருளில் இந்த யோகாசன நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

இதன்போது பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் இந்திய துணை தூதரகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி, வடமாகாண சிரேஷ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சித்தவைத்திய வைத்திய பீட வைத்தியர்கள், யோகாசன ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a comment

Comment