TamilsGuide

ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியீடு!...

திரையரங்குகளில் வெளியாகி ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்து உலகையே அதிரவைத்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்'திரைப்படம் நேற்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

துரந்தர் என்பது இந்திய உளவுத்துறையான அமைப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் திரில்லர் படமாகும்.

ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் முதன்மை இந்திய உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆர். மாதவன். சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஓடிடியில் ரிலீஸ்..

தியேட்டர்களில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த 'துரந்தர் 2' திரைப்படம், நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

தியேட்டரில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கத் தவறியவர்கள் இப்போது நெட்பிளிக்ஸ் மூலம் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்.

மேலும், இது இந்தி மொழிப் படம் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் ஆடியோ மற்றும் சப்டைட்டில்களுடன் பார்ப்பதற்குக் கிடைக்கிறது.

படச்சுருக்கம்..

பாகிஸ்தானின் கராச்சி நகருக்குள் ரகசியமாக நுழையும் இந்திய ஏஜென்ட்கள், அங்கிருக்கும் பயங்கரவாத நெட்வொர்க்குகளை எப்படித் துணிச்சலாக வேரறுக்கிறார்கள், இந்தியாவிற்கு எதிராக நடக்கும் சதியை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் அதிரடியான கதையாகும்.

பாக்ஸ் ஆபீஸ் வசூல்..

இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டு, தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது.

துராந்தரின் பக்கம் 1 கடந்த ஆண்டு நவம்பர் 14 அன்று தியேட்டர்களில் வெளியானது. உலகளவில் ரூ.1003 கோடி வசூலித்து, இந்திய சினிமாவின் 1000 கோடி கிளப்பில் இணைந்து அசத்தியது.

இதன் இரண்டாம் பாகம் நடப்பு ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று கோடை விடுமுறையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியானது.

முதல் பாகத்தை விடப் பலமடங்கு எகிறி, உலகளவில் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூலித்து ஆல் - டைம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
 

Leave a comment

Comment