போரில் ட்ரோன் தாக்குதல்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது. அதனால், நடப்பு ஆண்டில் 10 மில்லியன் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் ட்ரோன் உற்பத்தியை ஆண்டுக்கு 20 மில்லியன் ஆக இரட்டிப்பாக்கும் திறன் உக்ரைனிடம் உள்ளதாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறினார்.
இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை விரிவுப்படுத்தவும், வெளிநாட்டு விநியோகங்களை சார்ந்திருத்தலை குறைப்பதற்காகவும் உக்ரைன் எடுத்து வரும் முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறினார்.


