TamilsGuide

உலகமே வியந்து போற்றிய மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜா 

உலகமே வியந்து போற்றிய மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்களின் நினைவு தினம் இன்று.
(10.11.1934 - 11.06.1994)

மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான துரைராஜா அவர்கள் மக்களால் மதித்து வணங்கப்பட்ட பேராசிரியராக இந்த மண்ணிலே மிடுக்கோடு பவனி வந்தவர். அவரே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும், “துரைராஜா தேற்றத்தின்” (Thurai’s Law ) சொந்தக்காரர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகவும் இருந்து தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த மாமனிதர். இந்தத் தமிழ் மண்ணையும் மக்களையும் உயிருள்ளவரை நேசித்த உத்தமர் பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள்

வாழ்நாள் முழுதும் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் நினைவுதினத்தில் அவரை நினைவுகூர்வதில் பெருமைகொள்கிறது தமிழி


 

Leave a comment

Comment