TamilsGuide

இலங்கை திரை இசை எனும் அடை மொழியினுள் பிரபலமான பொப்பிசை பாடல்கள்

நீண்ட வழி நடந்து, உலகில் நிமிர்ந்த புராதன கலாச்சாரங்களுள் ஒன்றாக இருக்கும் எம் இலங்கை வாழ் தமிழர்களின் இசை பற்றி இலகுவில் சொல்லி முடிக்க முடியாது.
இலங்கை இசை, பண்டைய நாட்டுப்புற மரபுகள், பௌத்த கலாசாரம், ஐரோப்பிய தாக்கம் மற்றும் இந்திய கலாசாரத்தின் கலவையாகும். பப்பினும் (Baila) இசை வடிவம் போர்த்துக்கேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இலங்கையில் பிரபலமானது.
ஆனாலும் இசை பற்றி சுருக்கமாக, உங்கள் விருப்புக்கேற்றவாறு என்னால் இயன்றவற்றை தொகுத்து ஓர் உரைச் சித்திரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இலங்கை திரை இசை எனும் அடை மொழியினுள் நாட்டார் பாடல்கள்,
பொப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், ஈழப் பாடல்கள் எனச் சிறப்பிக்கப்படும் புரட்சிப் பாடல்கள், திருத்தலங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மீது பாடப்பட்ட ஆன்மிகப் பாசுரங்கள்,
இன்றைய இளம் சந்ததியினரால் முன்னெடுக்கப்படும் Hip pop, Rap இசை வடிவங்கள் வந்து கொள்ளும்.
ஈழத்தில் மீன்பாடும் தேன் நாடாம் மட்டு நகரில் இசையோடு கூடிய இனிமையான நாட்டார் பாடல்கள் வெளிவந்ததாக கூறுவார்கள். அவ்வளவிற்கு சந்தச் செறிவும். சங்கீதச் சுரமும் கலந்து சிந்தைக்கு விருந்து கொடுக்கும் வண்ணம் சிறப்பு மிக்க பாடல்கள் அவை.
மெல்லிசையில் என் சிற்றறிவிற்கு எட்டிய வரை, ஆரம்ப காலப் பாடல்களாக எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய காடு தழுவி வரும் கங்கையாளே எங்கும் ஓடி… எனும் பாடலும்,
இலங்கையின் மூத்த இசை அமைப்பாளர், ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் அவர்களின்
.உனக்கு தெரியுமா? நான் உன்னை நினைப்பது எனும் பாடலும் விளங்குகின்றது..
இதன் பின்னர் பி.முத்தழகு, கலாவதி, திருமலை பத்மநாதன், ரகுநாதன் போன்றோர் ஈழத்து மெல்லிசையின் இனிமையான அக் காலப் பயணத்திற்கு தூண்டு கோலாக விளங்கினார்கள்.
இரட்டையர்கள் திருமலைச் சந்திரன், ஆர். முத்துசாமி. ஆகியோருடன் பரா அவர்களும் இணைந்து மெல்லிசை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார்கள்.
மெல்லிசையின் தோற்றுவாய் என்பது மலையக நாட்டார் இலக்கியம், மலையக நாட்டார் பாடல்கள் ஊடாக பிறந்து கொள்கின்றது.
முத்துசாமியும், ரொக்சாமியும் வந்தபின்னர் தான் எஸ்.கே பரராஜசிங்கத்தின் ஆர்வம் ஈழத்து மெல்லிசையின் மீது மையல் கொண்டது.
பொப் இசைக்கு பங்களிப்பு நல்கியது போலவே, மெல்லிசைக்கு சகோதர மொழிக் கலைஞர்களின் பங்களிப்பு ஆரம்ப காலத்தில் கிடைக்கப்பெற்றது.
இவர்களுடன் ராஜமனோகரி புலேந்திரன், மனோகரி சதாசிவம், நிலாமதி பிச்சையப்பா, சிறீதர் பிச்சையப்பா, வர்ண ராமேஸ்வரன், போன்றோரும் ஈழத்து மெல்லிசைக்கு பங்களிப்பு நல்கியவர்களாக விளங்கினார்கள்.
#பொப்பிசை பற்றிப் பார்ப்போமா?
பொப் எனும் இசை வடிவம் இலங்கையில் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுபிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. இந்த வகையில் இலங்கை 1505ம்ஆண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658ம் ஆண்டு வரைபோர்த்துக்கேயர்களால் ஆளப்பட்டது.
அந்தக் காலங்களில் இலங்கையில் வாழ்ந்தஇந்து, பௌத்த சமயங்களைச் சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவமதத்திற்கு மாறவேண்டும் எனப் போர்த்துக்கேயர் ஆணை பிறப்பித்திருந்தனர்.இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள்கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.
மேற் கூறிய காரணங்களால் இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்தஇடங்களில் தேவாலயங்கள் கட்டியெழுப்பப் பட்டது. அப்போதைய இலங்கைமக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்தபோத்துக்கேயர், தேவ ஆராதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப்இசையினை பயன்படுத்த தொடங்கினர்.
இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம்நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்திவாரத்தின் சாயலே இன்றும்இலங்கையின் பொப் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.
அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சிலதமிழ் பொப் இசைப் பாடல்கள் செவிமடுக்கப்பட்டு வந்துள்ளன.
அந்தக்காலங்களில்பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களைபாடிவந்திருந்தனர்.
“சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்”
அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்”
என்று ஆரம்பிக்கும் பாடலும்,

அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பது போன்று அமையும்பாடலான
“என்ன பிடிக்கிறாய் அந்தோனி?
எலி பிடிக்கிறன் சிஞ்சோரே!
பொத்தி பொத்தி பிடி அந்தோனி!!
பூறிக் கொண்டோடுது சிஞ்சோரே”
போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயேதமிழில் உருவாகிய பிரபலமான பொப்பிசைப் பாடல்கள்.
இவ்வாறான பல பாடல்கள், ஆவணப்படுத்தல் ஏதுமின்றி கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன.
அதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேலைத் தேச நாகரிகங்கள்அறிமுகப்படுத்தப் பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறைவந்ததும், இசை வடிவத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின.
ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம்,போன்றவாத்தியங்கள்,இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர்காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேறஆரம்பித்தது.
குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்களில் (விசேடநிகழ்வுகள்), விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்றநிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” Twist Dance என்றஆட்டத்தின் போதும் இந்த பொப் இசை மேற்கத்தய இசைக் கருவிகளின்பக்கவாத்தியத்துடன் புது உத்வேகம் பெற்று அரங்கேறத் தொடங்கியது.
அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும், திருமணம் போன்ற வீட்டுவிசேடங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன. இலங்கையில் சுதந்திரத்தின் (1948) பின்னரான காலப் பகுதியில், பல புதியஇசைக் குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின.
இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள்.இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக் குழுக்களால் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியது.
இருப்பினும் தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துகாரணத்தால் இலங்கை தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால்1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக் கூடியதாகஇருந்தது.
நவநாகரிகப்படுத்தி,மேலைநாட்டு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்து சேர்ந்த போது, தமிழ்பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறு கொண்டெழுந்து என்றும்இல்லாத சிகரத்தை அடைந்தது.
ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும். சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே
“சுராங்கனி சுராங்கனி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல்,
“கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல்,
“குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போல் பல பாடல்கள்வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றன.
அவை இலங்கையில் மட்டுமன்றி இலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தைஎற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின.
நித்தி கனகரத்தினைத்தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன்; அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன்.வி.முத்தழகு, ஸ்டெனிஸ் சிவாநந்தன், அன்சார், என்.இமானுவேல் போன்றோர்ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வந்து சேர பொப்பிசை வளரத் தொடங்கியது.
பல இசைக் குழுக்களும் காலப் போக்கில் பொப் இசையினுள் தடம் பதிக்க பலபாடல்கள் வெளிவரத் தொடங்கின.
இக் காலம் பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அன்றைய காலங்களில் இலங்கையில் பொப்பிசை, நகைச்சுவை, மற்றும் சில கலைகள் இலங்கை மண்ணியற் பண்பு,இலங்கை மொழி வழக்கு, என்பவற்றை மட்டுமன்றி சமுதாயசீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது.
இதற்கு "நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே!" என்ற பாடலைஉதாரணமாகச் சொல்லலாம்.
இன்றும் கூடசுராங்கனி போன்ற பொப்பாடல்கள் மீள்கலவை இசைவடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை நீங்கள் பார்த்தும், கேட்டுமிருக்ககூடும்.
எனினும், மேற்படி பொப் இசையில் சிங்களவர்கள் இன்று சிகரத்தை அடைந்துள்ளனர்.
சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களைகொடுத்து அவர்களின் இசையினை ஊக்குவிக்கின்றன.
எழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை.
துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது.
அங்கு வாழும் தமிழர்களின் இசை முயற்சிகள் என்பன அவற்றையும் கடந்து அவர்களின் வாழ்வின் பல அம்சங்களோடும் கலந்தவை.
அவர்களின் தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குப் பாடல்கள் அவற்றில் ஓரளவுக்கு மூத்தவை.
அதேவேளை, அங்குள்ள தமிழர்களின் நாட்டார் பாடல்களின் இசையும், கூத்தின் இசையும், அருகே இருந்த சிங்கள மக்களின் இசை வடிவங்களும், அவ்வளவு ஏன் ஆதிக்குடிகளான வேடர்களின் இசையும் கூட இலங்கை தமிழர் இசையின் வேர்களாக கருதப்படக் கூடியவை.
இலங்கையை முதல் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்களான போர்த்துக்கீஸரின் மூலம் அங்கே வந்த பைலா ஆடலுக்கான இசையும் இலங்கை பாடல்களில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மெல்லிசைப் பாடல்கள் (Sri Lankan Light Classical/Melody Songs) ஈழத்துத் தமிழ் மற்றும் சிங்களக் கலைத்துறையில் மிகவும் புகழ்பெற்றவை. இவை பெரும்பாலும் இனிமையான இசையும், ஆழமான வரிகளும் கொண்டவை. 1970-80களில் இலங்கை வானொலி மூலம் இவை மிகவும் பிரபலமடைந்தன.
அதனையடுத்து உள்ளூர் பாடல்களை பாடவேண்டும் என்ற ஒரு தரப்பினரின் வேட்கை அங்கே இலங்கைக்கென ஒருவகை மெல்லிசையையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த மெல்லிசையின் வளர்ச்சிக்கு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுதாபன தமிழ் பிரிவு கணிசமான பங்களிப்பை செய்துள்ளது.
இலங்கை இசைப்பிரியர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர்கள் வரிசையிலே எங்கள் குடும்ப நண்பரும் எனக்கு 2ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருமான முன்னணிப் பாடகருமான V. முத்தழகு அவர்களுக்கு மெல்லிசையில் பிரத்தியேகமான ஓர் இடம் உண்டு
தமிழ் சமூகம் அவரை V. முத்தழகு என்று அழைத்தாலும் நமது சகோதர மொழி (சிங்களத்தில் )ரசிகர்களுக்கு அவரை " சூரியகுமார் முத்தழகே "என்று சொன்னால்தான் தெரியும்!
A. M. ராஜா அவர்களின் மென்மையும், இனிமையும் கொண்ட குரல்வளம் இயற்கையாகவே அமைந்துள்ள வரம் பெற்றவர்.
1955ம் காலத்தில் Seda Sulang (Sinhala: සැඩසුළං), படத்தில் AM ராஜா அவர்கள் " பாடிய சிங்கள பாடல்களை அச்சொட்டாக அதேபோல் பாடுவதைக் கேட்ட சகோதர மொழி திரைப்பட ஆர்வலர்கள் அவரை சூரியகுமார் என்று பேரிட்டுத் தம்பால் ஈர்த்துக்கொண்டதோடு தமிழ்ப்பாடகராக அவருக்குக் கிடைக்காத அந்தஸ்தை வழங்கிப் பல்வேறு நாடுகளுக்கும் கூட்டிச்சென்று அவரது பாடும் திறமையை
உலகறியச் செய்தது ஓர் அற்புதம்தான்!
Seda sulang படத்தில் AM ராஜா ஜமுனா ராணி பாடிய ஒரு பாடல் link
https://youtu.be/4s8d08Y_ApQ?si=fp4oAV4XELcWvl_H
வானொலியில் மெல்லிசைப்பாடல்கள் அறிமுகமான காலம் தொட்டுத் தொடர்ச்சியாக ஏராளமான இனிய பாடல்களையும் பற்பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய முத்தழகு சார் பொப்பிசைப் பாடல்களும் பாடியவர்!
"வெட்கம் வந்ததோ?" என் மேல் வெறுப்பு வந்ததோ அதில் மனதில் பதிந்த ஒன்று!
https://youtu.be/nNtyhmYMfnQ?si=irkQvpvhXiXn8Cem
இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் தயாரான காலப்பகுதியில் அவரும், கலாவதியும் அருமையான டூயட் பாடல்களைப் பாடியதை இலங்கை இசைப்பிரியர்கள் மறந்திருக்க மாட்டார்கள்!
என் அப்பா AC.மைக்கல் J.விக்டோரியா தயாரித்த, மற்றும் ரீமேக் செய்த சில படங்களுக்கு அவர் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது பெரும் குறையாக இருப்பதை நம் சந்திப்பில் அடிக்கடி சொல்லி கவலைப்படுவார்
குறிப்பாக 1975ல் வெளிவந்த "புதிய காற்று" படத்தில் " ஓகோ! என்னாசை ராதா! "இன்றும் முணுமுணுக்கப்படும் ஒரு பாடல்!
https://youtu.be/3e-gU3j-2wQ?si=IsVE2QM-bJ_4EMZb
1976ல்" கோமாளிகள் "படத்தில்" சம்மதமா சொல்லித்தரவா?
https://youtu.be/MUMF8dkv_YA?si=Z_SE3jr93Qj4eenK
""இளவேனிலே!" https://youtu.be/E5vJ7_1-P9A?si=CSJpX7HhD5R-6_3D
1978ல் நான் உங்கள் தோழன் படத்தில்
காதலின் ஊர்வலம் கண்ணிலே தோன்றுதே
https://youtu.be/ms_3BYy_6zo?si=MDojKU6mHAdD28wc
" தென்றலும் புயலும்"படத்தில்" சந்திரவதனத்தில் இந்திரநீலப்பூ"
https://youtu.be/Ads3prqQrB4?si=FhbPulEzvbXOlyVY
"அரும்பான ஆசை"
https://youtu.be/hZOToWLRQ8g?si=pkQTrGeo7_8vnAgG
அதே ஆண்டில் வெளிவந்த "அனுராகம்" படத்தில் " எண்ணங்களாலே இறைவன்தானே "
https://youtu.be/8a6a9qAwCzk?si=gNW02myh0259Kr9v
" உன்னை வரைந்தேனே "
https://youtu.be/em7to9GoLNs?si=K5nOIlyo2h9VWH3B
1979ல் " எங்களில் ஒருவன் " படத்தில் "
உன்னைத் தேடி வந்த"
1980ல் "அவள் ஒரு ஜீவநதி" படத்தில் "பருவம் பதினாறு!"
https://youtu.be/14u-P8HYvd4?si=KiAs4EeXmqsnuJEo
1981ல் "நாடு போற்ற வாழ்க!" படத்தில் "மலர்ந்த கனவுகளோ"
"எந்தன் நெஞ்சை"
போன்ற பாடல்களைப் பாடிய முத்தழகு சிங்களத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட "இவளும் ஒரு பெண்" "அஜாஸத்த" ஆகிய படங்களுடன் "பனிமலர்கள்" படத்தில் "வீசும் குளிர்காற்றே" பாடலை 1981ல் பாடினார்!
https://youtu.be/WmDF1AaiA6Y?si=FnJ1quE5NNisfnR-
 

 

Leave a comment

Comment