நயாகரா நீர்வீழ்ச்சி நகராட்சியின் மெக்லியோட் சாலைக்கு வடக்கிலும், லண்டீஸ் லேனுக்கு தெற்கிலும் அமைந்துள்ள மில்லினியம் பொழுதுபோக்கு பாதையில் அண்மையில் நடந்த "மிகப்பெரிய பொதுச்சொத்து சேதப்படுத்தும்" செயலால், சுமார் 32 மரங்கள் வேண்டுமென்றே பாதியாக உடைக்கப்பட்டுள்ளன.
இதனைச் சரிசெய்ய வரிப்பணத்தில் இருந்து 20,000 டாலருக்கும் அதிகமாகச் செலவாகும் என்று அந்த நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 29 அன்று, அங்குள்ள ஒரு 'நினைவு மரம்' (யாரோ ஒருவரின் நினைவாக நடப்பட்ட மரம்) சேதமடைந்திருப்பதாக நகராட்சிக்குத் தகவல் கிடைத்தது.
அதன் பின்னர் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, மொத்தம் 32 மரங்கள் பாதியாக உடைக்கப்பட்டு கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு மரத்தையும் அகற்றிவிட்டு, புதிய மரத்தை நடுவதற்கு வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து சுமார் 550 முதல் 700 டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகை, சமூக மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை வீணடிப்பதாக நகராட்சி கவலை தெரிவித்துள்ளது.


