TamilsGuide

காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலை அதிகாரிகள், காலி மாநகர சபை தீயணைப்புப் படையுடன் இணைந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் விளைவாக, வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கான மின் விநியோகம் தற்காலிகமாகத் தடைபட்டது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Leave a comment

Comment