TamilsGuide

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான கருத்துகள், முறைப்பாடுகள், பாராட்டுகள் மற்றும் ஆலோசனைகளைப் பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இலங்கை பொலிஸார் “Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரிலான QR குறியீடு மூலம் இயங்கும் ஒரு டிஜிட்டல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சேவையானது, குடிமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் முறைப்பாடுகளை எளிதாக வழங்குவதற்கான வாய்ப்பை அளிப்பதும், அந்தத் தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி மக்களை மையமாகக் கொண்ட மிகவும் திறமையான சேவையை வழங்குவதையும் நோக்காக் கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அமைப்புமுறையின் மூலம், குடிமக்கள் பொலிஸ் நிலையங்களில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, ஒரு இணையதளத்தை அணுகி தங்கள் பதில்களைச் சமர்ப்பிக்கலாம்.

இந்த QR குறியீட்டை பயன்படுத்தும் முறை பின்வருமாறு:

    https://feedback.police.lk/ இணையத்தளத்தை அணுகவும்.
    உங்கள் கருத்தின் தன்மைக்கு ஏற்ப யோசனை / முறைப்பாடு / பாராட்டு / முன்மொழிவு ஆகியவற்றில் பொருத்தமான தெரிவைச் செய்யவும்.
    தேவைப்பட்டால் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேர்க்கவும்.
    பொலிஸ் நிலையத்திற்குச் சென்றது தொடர்பான தகவல்களைப் பதிவிடவும்.
    ஏனைய தொடர்புடைய தகவல்களைச் சேர்க்கவும்.
    சம்பவம் அல்லது உங்கள் யோசனை தொடர்பான விவரங்களை முழுமையாகக் குறிப்பிடவும்.

மேலும், இலங்கை காவல்துறையின் police.lk இணையதளத்தில் உள்ள மின்-சேவைகள் மற்றும் சமூக கருத்துப் பகிர்வு தளத்தை பார்வையிடுவதன் மூலம், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் முறைப்பாடுகளையும் எளிதாக வழங்க முடியும்.
 

Leave a comment

Comment