TamilsGuide

கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. 

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் கருப்பு. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமும் இதுவே ஆகும். சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈட்டிய படமும் கருப்பு தான்.

ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல் விவரத்தை அறிந்துகொள்ள ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களோ, அதே போல் அப்படத்தின் லாபம் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ளவும் அவர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது.

தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம்

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 175 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் ரூ. 80 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ரூ. 40 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது என தெரிகிறது.

நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் தமிழ்நாட்டில் அதிக வசூலித்த திரைப்படமும் இதுவே ஆகும். தமிழ்நாட்டில் அதிக லாபமும் தந்த திரைப்படமும் கருப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment