TamilsGuide

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி - வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்

பல புகழ்பெற்ற குடும்பங்களையும், வெற்றிகரமான தலைமுறைகளையும் ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும் இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது. ஆனால் 2026-ஆம் ஆண்டில் ஒரு தனித்துவமான நிகழ்வை இந்திய திரையுலகம் கண்டுள்ளது. தந்தையும், மகனும் ஒரே ஆண்டில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனையாளராக திகழ்கின்றனர்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாண்ட வெற்றி படமான 'பெத்தி'- 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் உலகளாவிய ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்தது. அத்துடன் 2026-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூலை செய்து, பாக்ஸ் ஆபீஸ் சாம்பியனாகவும் உருவெடுத்தது. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான 'பெத்தி' திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.

இந்த சாதனை சரித்திரத்தின் முக்கியத்துவம் என்பது வசூல் தொகையை கடந்து நிற்கிறது. ஒரு ஆண்டில் மிகப்பெரிய வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தந்தையும், மகனும் ஜோடியாக பிடித்திருப்பதை இந்திய திரையுலகம் இதற்கும் முன் கண்டதில்லை. ஒரு திரை குடும்பத்தை சேர்ந்த இரண்டு தலைமுறையினரும் ஒரே நேரத்தில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும் அபூர்வ தருணம் இது.

அவர்கள் நிகழ்த்திய இந்த சாதனையை தனித்துவமாக வெளிப்படுத்துவது அவர்கள் வெற்றி பெற்ற காலம் தான். பொதுவாக தற்போதைய சூழலில் திரையுலகினருக்கு மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிகள் அவசியமாக தேவைப்பட்ட ஒரு காலகட்டத்தில் இந்த இரு படங்களும் வெளியாகி வெற்றி பெற்றதுடன், திரையரங்கு சார்ந்த வணிகத்திற்கு புதிய உத்வேகத்தையும் அளித்திருக்கின்றன.

குறிப்பாக கோடை கால பருவத்தில் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகள் மூலமான வெற்றி கிடைக்காத நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 'பெத்தி' திரைப்படம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றியைப் பெற்று, அவர்களுக்கு நிம்மதியை வழங்கி உள்ளது.

சிரஞ்சீவியும், ராம்சரணும் இணைந்து 2026 ஆம் ஆண்டில் 'மெகா' குடும்பத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக மாற்றி உள்ளனர். இவை பல ஆண்டுகளுக்கு ஈடு இணையற்றதாக திகழக்கூடிய ஒரு பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தின் புதிய அத்தியாயத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.
 

Leave a comment

Comment