TamilsGuide

டப்பிங் பணிகளை நிறைவு செய்த மிஸ்டர் பாரத்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மிஸ்டர் பாரத்’. இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ‘கட்சி சேர’ புகழ் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டிரெய்லர், பாடல்கள், படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a comment

Comment