TamilsGuide

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது

கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று, வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி, மணலை கடத்தியுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு இந்த வாகன சாரதி, நீண்ட காலமாக இவ்வாறு கடத்தி வந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது, சட்டவிரோத மணல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், சாரதியை பொலிஸ் நிலையத்தில் மறித்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment