TamilsGuide

மத்திய கிழக்கில் புதிய அத்தியாயம் - அமெரிக்கா–ஈரான் உறவில் முக்கிய திருப்பம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை தொடர்பான சில முக்கிய தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 'ஹோர்முஸ் நீரிணை' உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திறக்கப்படுவதற்கும், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை முற்றுகைகளை நீக்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விபரங்கள் அடுத்த 24 முதல் 48 மணித்தியாலங்களுக்குள் பகிரங்கப்படுத்தப்படவுள்ளன.

இருதரப்பிற்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்த தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை இவ்வார இறுதியில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதில் இந்த உடன்படிக்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 

Leave a comment

Comment