• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அலிபாபாவும் 40 திருடர்களும்... 1956

சினிமா

பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார்.

மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார்.

ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!

இந்த படத்தில் நடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான்.

பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும்.

எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே..ஹிட்

Devaraj Andrews

Leave a Reply