TamilsGuide

80-வது பிறந்தநாளை கொண்டாடிய ட்ரம்ப் - வெள்ளை மாளிகையில் அரங்கேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிகள்

வழக்கமாக அதிபர்களின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மட்டுமே நடக்கும் வெள்ளை மாளிகை வளாகத்தில், முதல் முறையாக UFC போட்டிகளுக்கான பிரத்யேக எண்கோண கூண்டு (Octagon) அமைக்கப்பட்டது.

ட்ரம்ப்பின் 80-வது பிறந்தநாளான நேற்று இந்த பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், UFC அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டானா வைட் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு இடையே அமர்ந்து போட்டிகளை மிக அருகில் இருந்து ரசித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், எரிக் ட்ரம்ப், இவான்கா ட்ரம்ப், டிஃப்பனி ட்ரம்ப் மற்றும் பேரன் ட்ரம்ப் உட்பட டிரம்ப்பின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் தலைவர் டேவிட் எலிசன் போன்ற முன்னணி உலகப் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு டிரம்பை நேரில் சந்தித்தனர்.

வெள்ளை மாளிகையில் இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாகவே, ஈரான் நாட்டுடன் ஒரு முக்கிய உடன்படிக்கை எட்டப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி முடிந்த கையோடு, டிரம்ப் உடனடியாக G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.
 

Leave a comment

Comment