• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் சமூக நோக்கமுள்ள தமிழர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய புற்று நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து நடைபவனி

கனடா

கனடாவின் BEHIND ME FOUDATION மற்றும்   BEHIND ME INTERNATIONAL MEDIA  ஆகிய சமூக நோக்கமுள்ள தமிழர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய 'புற்று நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்து நடைபவனி- WALKATHON 

கனடாவின் BEHIND ME FOUDATION மற்றும்   BEHIND ME INTERNATIONAL MEDIA  ஆகிய சமூக நோக்கமுள்ள தமிழர் நிறுவனங்கள் இணைந்து கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாண பல்'கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்று தற்போது கனடாவின் பல பாகங்களிலும் மருத்துவர்களாக பணியாற்றும் வைத்தியப் பெருந்தகைகளின் அமைப்புடன் கைகோர்த்து நடத்திய பயனுள்ள நடைபவனி பல ஆக்கபூர்வமான பலன்களை அளித்துள்ளது என்றே கூறவேண்டும்.

13ம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்த பயனுள்ள நிகழ்வு நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்களை அர்ப்பணித்த ஒரு தமிழர் நிகழ்வு என்றே கூறவேண்டும்.

ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவரது பாரியார் டாக்டர் ராஜேஸ் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.. அத்துடன் வைத்திய கலாநிதி மைலாசன் அவர்களும் தனது துணைவியார் சகிதம் ஏற்பாடுகளைக் கவனித்தார். கனடாவின் BEHIND ME FOUDATION மற்றும்   BEHIND ME INTERNATIONAL MEDIA  ஆகிய சமூக நோக்கமுள்ள தமிழர் நிறுவனங்களின் தலைவர் கனா செல்வா உட்பட அவரது உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கினார்கள். பல ஊடக நண்பர்கள் தங்களை அர்ப்பணித்து அந்த இடத்தில் தங்கள் பணி செ ய்தனர்.

சத்தியன்- கனடா உதயன்

Leave a Reply