கொழும்பில் பிரமாண்ட பரதநாட்டிய உலகசாதனை நிகழ்வு - கலைக்கோவில் நெடுந்தீவு வளாக மாணவர்களும் பங்கேற்றனர்…
இலங்கை
கொழும்பில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரமாண்ட பரதநாட்டிய உலகசாதனை நிகழ்வில் 5000 இற்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றுகூடி நடனமாடி உலகசாதனை படைத்தனர். இந்த நிகழ்வில் எமது கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரியின் நெடுந்தீவு வளாக மாணவர்களும் பங்கேற்று தாயகத்தில் நெடுந்தீவு மண்ணிற்கும், எமது கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதற்கு முழுமையாக உழைத்த எமது கல்லூரியின் நெடுந்தீவு வளாக ஆசிரியர் திருமதி. மேகலா செல்வகுமார் அவர்களுக்கும், எமது கல்லூரியின் நெடுந்தீவு வளாக இணைப்பாளர் திருமதி. சிவகௌரி ஜெகதீஸ்வரன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரிற்கும் எமது கனேடிய வளாகங்கள் மற்றும் கலைக்கோவில் இளங்கலைஞர் ஒன்றியம் என்பன இணைந்து மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர். S






















