TamilsGuide

சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர்

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக ஜொலித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும், முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.

இந்தி சினிமா தாண்டி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவிலும் அசத்தி வருகிறார். விரைவில் தமிழ் சினிமாவிலும் நுழையப்போகிறார் என்று கூறப்படுகிறார்.

இதுவரை ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் ஜான்வி கபூர், சமீபத்தில் ராம்சரண் ஜோடியாக 'பெத்தி' படத்துக்காக ரூ.7 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதில் அவரது கவர்ச்சி நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.

படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும், தனது சம்பளத்தை தற்போது ரூ.8 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். இது திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உழைப்புக்கேற்ற கூலியை கேட்டு வாங்குவதில் அம்மணி கெட்டிக்காரர் தான்.
 

Leave a comment

Comment