தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கருப்பு. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்தார். படத்தை இயக்கியது மட்டுமின்றி, வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்களுடன் அனாகா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, ஷிவதா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
2026ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிலிருந்து இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்துள்ளது கருப்பு. மேலும், சூர்யாவின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் செய்த படமாகவும் கருப்பு இடம்பிடித்துள்ளது.
கருப்பு திரைப்படத்தின் வசூல் பற்றி விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், 4 வாரங்களில் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 331 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


