என் இனிய தமிழ் மக்களே ! என்ற உச்சரிப்பிற்கு சொந்தக்காரர். 1996ம் ஆண்டு உலகத் தமிழ் பண்பாடு மகாநாடு ரொரன்ரோவில் நடைபெற்ற போது சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பொய்யற்ற பேச்சு, வீறுநடை, எளிய சுபாவம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சினிமா செட்டுக்குள் இருந்த கமராவை கிராமத்து மண்வாசனையில் ஓட வைத்தவர். பாடல்களை எப்படி படமாக்குவது என்பதற்கு புதிய பரிமாணம் தந்தவர். அலைகள் ஓய்வதில்லை திரைகதையில் புதுவேதம் கற்பித்தவர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த போது கவிப்பேரரசு வைரமுத்துவின் நண்பர் என்று சொன்னதுமே முதல் மரியாதை தந்தாயே!. கனடா என்றதுமே நன்றி மறக்காமல் உலகப் பண்பாட்டு மகாநாட்டிற்கு அழைப்பு விடுத்த செல்வா எப்படி இருக்கிறார் என்று சுகம் விசாரித்து நன்றி பாராட்டியது நட்பின் உச்சம் . அதுதான் எங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.
இதய அஞ்சலிகள்!
தமிழன் வழிகாட்டி செந்தி --


