TamilsGuide

சிகரெட் வரி குறைப்புகளால் அரசுக்கு 17.3 பில்லியன் ரூபா இழப்பு

சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் அதே வேளையில், பொதுமக்கள் மீதான வரிச்சுமையை அரசாங்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சாட்டினார்.

பொருளாதாரம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய சஜித் பிரேமதாச, பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் பிற வரிகளை அதிகரிப்பது உள்ளிட்ட, தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான அதிக வரி விதிப்பின் மூலமே அரசாங்கத்தின் வருவாய் வளர்ச்சி பெருமளவில் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

புகையிலை மீதான வரியை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மீறி, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் உயர்த்தப்பட்ட அதே வேளையில், சிகரெட்டுகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

சிகரெட் மீதான வரிக் குறைப்பால், அரசிற்கு கிடைக்கக்கூடிய வருவாயில் சுமார் ரூ. 17.3 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, கிடைக்கும் மேலதிக வருவாயைப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.

மேலும், வரிவிதிப்பு வணிகங்கள், வேலைவாய்ப்பு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் பரந்த பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அவர் கவலைகளை எழுப்பினார்.
 

Leave a comment

Comment