உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார்.
நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரும் சோகமாகியுள்ளது.
பாரதிராஜாவின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேனி வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் அவரின் சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டில் நாளை (ஜூன்.11) பிற்பகல் 3 மணி அளவில் பாரதிராஜா உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று இரவு 9 மணி வரை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.


