கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை, விசேட மருத்துவக் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான கட்டளை இன்று (10) பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
சுரேஷ் சலே சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று கடந்த ஜூன் 4 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பான கட்டளையை இன்றைய தினம் வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
அங்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.


