அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாரசீக வளைகுடா பிராந்தியத்தை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர்க்களத்தில் தோல்விகளைச் சந்தித்த போதிலும், ஈரானின் உறுதிநிலைபாடுகளை அமெரிக்கா மேலும் சோதிக்க நினைக்கிறது.
வரலாற்றில் இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் பாரசீக வளைகுடாவில் ஊடுருவும் வெளியாட்கள் கடுமையான விளைவுகளைச் சந்தித்துள்ளனர்.
அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஈரானின் ஆயுதப் படைகள் பதிலடி கொடுக்கவல்லது.
அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால் ஈரான் பகுதியை விட்டு வெளியேறுமாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் தனது X தள பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


